< Back
தேசிய செய்திகள்
குரூப் பி, குரூப் சி பணியாளர்களுக்கு ரூ.7 ஆயிரம் தீபாவளி போனஸ்; கெஜ்ரிவால் அறிவிப்பு
தேசிய செய்திகள்

குரூப் பி, குரூப் சி பணியாளர்களுக்கு ரூ.7 ஆயிரம் தீபாவளி போனஸ்; கெஜ்ரிவால் அறிவிப்பு

தினத்தந்தி
|
6 Nov 2023 12:17 PM IST

குரூப் பி, குரூப் சி பணியாளர்கள் 80 ஆயிரம் பேர் பயன் பெறும் வகையில் ரூ.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இன்று பேசும்போது, டெல்லி அரசில் பணியாற்ற கூடிய, அரசிதழ் பதிவுபெறாத குரூப் பி பணியாளர்கள் மற்றும் குரூப் சி பணியாளர்களுக்கு ரூ.7 ஆயிரம் தீபாவளி போனஸ் வழங்கப்படும்.

இதன்படி குரூப் பி, குரூப் சி பணியாளர்கள் 80 ஆயிரம் பேர் பயன் பெறும் வகையில் ரூ.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

என்னுடைய அரசு, பணியாளர்களின் வாழ்க்கை சிறப்படைவதற்கான முயற்சியை எப்போதும் மேற்கொண்டு வருகிறது. இதுபோன்ற முயற்சிகள் வருங்காலத்திலும் தொடரும் என்று கூறினார்.

மேலும் செய்திகள்