< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
டெல்லி விமான நிலையத்தில் ரூ.90 லட்சம் தங்கம் பறிமுதல்: பயணி கைது
|17 Feb 2023 6:07 AM IST
1 கிலோ 760 கிராம் எடையில் இருந்த 2 தங்கக்கட்டிகளை அதிகாரிகள் கைப்பற்றினர்.
புதுடெல்லி,
சவுதி அரேபியாவின் ரியாத்தில் இருந்து டெல்லிக்கு வந்த விமான பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தினார்கள். அப்போது ஒரு பயணி தனது உள்ளாடைக்குள் மறைத்து தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
1 கிலோ 760 கிராம் எடையில் இருந்த 2 தங்கக்கட்டிகளை அதிகாரிகள் கைப்பற்றினர். அதன் மதிப்பு ரூ.90.27 லட்சம் ஆகும். இது தொடர்பாக சுங்க அதிகாரிகள் அந்த பயணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.