< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மத்தியபிரதேசத்தில் ரூ.8 கோடி தங்கம் கடத்தல்; இருவர் கைது
|11 Sept 2023 4:21 AM IST
இதுகுறித்து 2 பேரை கைது செய்து விசாரணை நடக்கிறது.
போபால்,
மும்பையில் இருந்து சாலை வழியாக மத்தியபிரதேசத்திற்கு தங்கம் கடத்தி வர இருப்பதாக போலீசாருக்கு துப்பு கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் மாநில எல்லையில் சோதனைச்சாவடி அமைத்து தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
அப்போது ரத்லம் மாவட்டத்தில் சந்தேகத்தை கிளம்பும் வகையில் வந்த இருசக்கர வாகனத்தை மடக்கி பிடித்து நிறுத்தினர்.
சோதனையில் சுமார் 13¼ கிலோ தங்கம் கடத்தி வந்தது தெரிந்தது. அதனுடன் அமெரிக்க டாலர்கள், அரபு நாடுகளின் பணக்கட்டுகள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டது. பறிமுதலான தங்கத்தின் மதிப்பு ரூ.8 கோடி என போலீஸ் உயர்-அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து 2 பேரை கைது செய்து விசாரணை நடக்கிறது.