< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
காஷ்மீரில் இந்த ஆண்டு ரூ.7 கோடி போதைப்பொருள் பறிமுதல் - 217 பேர் கைது
|2 Jun 2023 4:08 AM IST
இதுவரை 217 போதைப்பொருள் கடத்தல்காரர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஸ்ரீநகர்,
காஷ்மீர்போலீசார் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். பாரமுல்லா மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 217 போதைப்பொருள் கடத்தல்காரர்களை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர்கள் வைத்திருந்த 5 கிலோ அளவிலான போதைப்பொருளை கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.
அவற்றின் மதிப்பு ரூ.7 கோடி என போலீசார் தெரிவித்தனர். போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனங்கள், செல்போன்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டு சோதனைக்கு உட்படுத்தி வருகிறார்கள்.