< Back
தேசிய செய்திகள்
ரூ.37.50 லட்சம் செலுத்தவேண்டும்: வருமானவரித்துறையின் நோட்டீசை கண்டு அதிர்ந்த கூலித்தொழிலாளி

கோப்புப்படம் 

தேசிய செய்திகள்

ரூ.37.50 லட்சம் செலுத்தவேண்டும்: வருமானவரித்துறையின் நோட்டீசை கண்டு அதிர்ந்த கூலித்தொழிலாளி

தினத்தந்தி
|
21 Aug 2022 7:47 PM IST

பீகாரில் தினக்கூலி செய்யும் ஒருவருக்கு 37.5 லட்சம் ரூபாய் வருமான வரி பாக்கி செலுத்துமாறு வருமான வரித் துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

பீகார்,

பீகார் மாநிலம் ககாரியா மாவட்டத்தில் உள்ள மகௌனா கிராமத்தில் வசிக்கும் கிரிஷ் யாதவ். தினக்கூலியான இவர் ஒரு நாளைக்கு சுமார் ரூ.500 சம்பாதித்து வருகிறார்.

இந்நிலையில், இவருக்கு ரூ.37.5 லட்சம் வருமான வரி செலுத்துமாறு கிடைத்த நோட்டீஸை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து கிரிஷ் யாதவ் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தை அணுகி புகார் அளித்தார். இந்நிலையில், கிரிஷ் பகிர்ந்துகொண்ட தகவலின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும், முதல்கட்ட விசாரணையில் இது ஒரு மோசடி வழக்காகத் தெரிவதாகவும் அலவுலி காவல் நிலையத்தின் போலீஸ் அதிகாரி புரேந்திர குமார் கூறினார்.

புகார்தாரர் தனது பெயரில் வழங்கப்பட்ட பான் எண்ணுக்கு எதிராக நோட்டீஸைப் பெற்றுள்ளார் என்று போலீஸ் அதிகாரி கூறினார். "டெல்லியில் தான் சிறிய வேலைகளைச் செய்து வந்தேன். அதைக் கொண்டு ஒரு முறை பான் கார்டைப் பெற முயற்சித்தேன் என்று கிரிஷ் கூறியுள்ளார்.

மேலும், அந்த நோட்டீசில், கிரிஷ் ராஜஸ்தானைச் சேர்ந்த நிறுவனத்துடன் தொடர்புடையவர் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் அந்த நிலைக்கு ஒருபோதும் சென்றதில்லை என்று கிரிஷ் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த வழக்கு குறித்து போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்