< Back
தேசிய செய்திகள்
வங்கி அருகே நின்றுகொண்டிருந்த காரில் இருந்து ரூ. 2.64 கோடி பறிமுதல் - 3 பேரிடம் விசாரணை
தேசிய செய்திகள்

வங்கி அருகே நின்றுகொண்டிருந்த காரில் இருந்து ரூ. 2.64 கோடி பறிமுதல் - 3 பேரிடம் விசாரணை

தினத்தந்தி
|
31 Jan 2024 12:52 PM IST

வங்கி அருகே நின்றுகொண்டிருந்த காரில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, அந்த காரில் இருந்து ரூ. 2.64 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ராய்ப்பூர்,

சத்தீஷ்கர் மாநிலம் டிரக் மாவட்டம் பைலை பஹடி நகரில் செக்டார்-1 பகுதியில் உள்ள வங்கி அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் 2 கார்கள் நின்றுகொண்டிருப்பதாக போலீசாருக்கு இன்று அதிகாலை ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அப்பகுதிக்கு விரைந்து வந்த போலீசார் 2 கார்களில் இருந்த 3 பேரிடம் விசாரணை நடத்தினர். மேலும், கார்களிலும் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, ஒரு காரில் கட்டுக்கட்டாக 2 கோடியே 64 லட்ச ரூபாய் பணம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

பணத்தை பறிமுதல் செய்த போலீசார், காரில் இருந்த 3 பேரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் பணத்திற்கு உரிய ஆதாரம் அளிக்காததால் போலீசார் அதை பறிமுதல் செய்தனர். மேலும், இது குறித்து வருமானவரித்துறையினருக்கு தகவல் கொடுத்த போலீசார், 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்