< Back
தேசிய செய்திகள்
பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.21 லட்சம் தங்கம் சிக்கியது
தேசிய செய்திகள்

பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.21 லட்சம் தங்கம் சிக்கியது

தினத்தந்தி
|
26 Jun 2022 5:02 AM IST

பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.21 லட்சம் தங்கம் சிக்கியுள்ளது.

பெங்களூரு:

துபாயில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக, பெங்களூரு விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்பேரில் விமானத்தில் வந்திறங்கிய பயணிகளை அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது ஒரு பயணியின் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் வலுத்தது. இதனால் அவரை தனியாக அழைத்து சென்று உடைமைகளை சோதனை நடத்திய போது தங்கம் சிக்கவில்லை.

இந்த நிலையில் அந்த பயணியின் செல்போன் பாதுகாப்பு கவர் சற்று தடிமனாக இருந்ததால் செல்போனை வாங்கிய அதிகாரிகள் கவரை திறந்து பார்த்தனர். அப்போது அந்த செல்போன் கவரில் தங்கம் இருந்தது. இதையடுத்து தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.21 லட்சம் ஆகும். தங்கத்தை கடத்தி வந்த பயணி பெங்களூரு ஆர்.டி.நகரை சேர்ந்தவர் ஆவார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்