< Back
தேசிய செய்திகள்
தாவணகெரேயில்  பெண்ணின் கவனத்தை திசை திருப்பி ரூ.2½ லட்சம் நகை திருட்டு
தேசிய செய்திகள்

தாவணகெரேயில் பெண்ணின் கவனத்தை திசை திருப்பி ரூ.2½ லட்சம் நகை திருட்டு

தினத்தந்தி
|
27 Sept 2023 12:15 AM IST

தாவணகெரேயில் பெண்ணின் கவனத்தை திசை திருப்பி ரூ.2½ லட்சம் நகையை மர்மநபர்கள் திருடி சென்றார்.

சிக்கமகளூரு-

தாவணகெரே டவுன் குந்துவாடா பகுதியை சேர்ந்த பரிமளா. இவரது சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்தார். அப்போது மர்மநபர் ஒருவர் பரிமளாவின் வீட்டிற்கு வந்தார். அந்த நபர் குடிப்பதற்கு தண்ணீர் வேண்டும் என கேட்டுள்ளார்.

இதையடுத்து பரிமளா வீட்டின் உள்ளே சென்று தண்ணீர் எடுக்க சென்றார். அப்போது அந்த நபர் மேசையில் இருந்த ரூ.2½லட்சம் மதிப்பிலான நகையை திருடிவிட்டு சென்றார். பின்னர் பரிமளா வந்து பார்த்தபோது அந்த நபர் மற்றும் மேசையில் இருந்த நகையையும் காணவில்லை.

இதையடுத்து நகையை வீட்டில் உள்ள பல்வேறு இடங்களில் அவர் தேடினார். ஆனால் கிடைக்கவில்லை. அந்த நகையை மர்மநபர் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பரிமளா படாவணே போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து எஸ்.பி.எஸ் நகரை சேர்ந்த சாகில் (வயது 30) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் இருந்து ரூ.2½ லட்சம் மதிப்பிலான நகையை மீட்டனர். இதுகுறித்து போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மேலும் செய்திகள்