< Back
தேசிய செய்திகள்
அரசு வேலைவாங்கி தருவதாக ரூ.2 லட்சம் மோசடி
தேசிய செய்திகள்

அரசு வேலைவாங்கி தருவதாக ரூ.2 லட்சம் மோசடி

தினத்தந்தி
|
17 Jun 2023 10:51 PM IST

திருபுவனை அருகே அரசு வேலைவாங்கி தருவதாக ரூ.2 லட்சம் மோசடி செய்த நபரை போலீசார் விசாரித்து வருகின்றனர்,.

திருபுவனை

திருபுவனை கலித்தீர்த்தாள்குப்பம் ரமேஷ் என்பவர் மதகடிப்பட்டு பாளையம் பகுதியைச் சேர்ந்த வடிவேல் என்பவரிடம் கடந்த 2018-ஆம் ஆண்டு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.2 லட்சம் வாங்கியுள்ளார். வேலை வாங்கி தராததால் ரமேஷிடம் அவர், பலமுறை பணத்தை திரும்ப கேட்டும் கொடுக்கவில்லை. இன்று மதகடிப்பட்டு மாரியம்மன் கோவில் அருகே நின்று கொண்டிருந்த ரமேசிடம், வடிவேல் மீண்டும் பணத்தை கேட்டபோது, அவரை சராமரியாக தாக்கி ஆபாச வார்த்தைகளால் திட்டி உள்ளார்.

திருபுவனை போலீசில் வடிவேல் கொடுத்த புகாரின், ரமேஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்