< Back
தேசிய செய்திகள்
குஜராத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கோடி முதலீடு:  கவுதம் அதானி
தேசிய செய்திகள்

குஜராத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கோடி முதலீடு: கவுதம் அதானி

தினத்தந்தி
|
10 Jan 2024 1:31 PM IST

2014-ம் ஆண்டில் இருந்து இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 185 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது.

காந்திநகர்,

குஜராத்தின் காந்திநகரில் துடிப்பான குஜராத் உலகளாவிய உச்சி மாநாடு தொடங்கி நடந்து வருகிறது. 10-வது ஆண்டாக இந்த முறை நடக்கும் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஐக்கிய அரபு அமீரக அதிபர் அல் நஹியான் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். அவரை பிரதமர் மோடி முறைப்படி வரவேற்றார்.

இந்த நிலையில், பிரதமர் மோடி, ஐக்கிய அரபு அமீரக அதிபர் அல் நஹியான், குஜராத் முதல்-மந்திரி பூபேந்திர பட்டேல், மந்திரிகள், தொழில் அதிபர்கள் மற்றும் பல்வேறு நட்பு நாடுகளை சேர்ந்தவர்களும் இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய அதானி குழும தலைவர் கவுதம் அதானி, கடந்த தசாப்தத்தின் புள்ளி விவரங்கள் குறிப்பிடத்தக்கவை. 2014-ம் ஆண்டில் இருந்து இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 185 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது. தனிநபர் வருவாயும் ஆச்சரியமளிக்கும் வகையில், 165 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது.

இந்த தசாப்தத்தின் புவிசார் அரசியல் மோதல்கள் மற்றும் பெருந்தொற்று சவால்கள் ஆகியவற்றை கவனத்தில் கொள்ளும்போது இந்த சாதனை ஈடு இணையற்றது என்று கூறினார்.

அவர் தொடர்ந்து, அதானி குழுமம் குஜராத்தில், அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கோடி மதிப்பில் முதலீடு மேற்கொள்ளும். இதனால், 1 லட்சத்திற்கும் மேற்பட்ட நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று கவுதம் அதானி கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்