< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
டெல்லியில் ரூ.1,500 கோடி போதைப்பொருட்கள் அழிப்பு
|22 Dec 2022 5:32 AM IST
டெல்லி போலீசாரால் கைப்பற்றப்பட்ட ரூ.1,513 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் அதிரடியாக அழிக்கப்பட்டன.
புதுடெல்லி,
தலைநகர் டெல்லி மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க மத்திய அரசோடு, அந்தந்த மாநில போலீசாரும், போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகளும் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு கடத்தல் கும்பலை கைது செய்து, போதைப்பொருட்களையும் கைப்பற்றி வருகிறார்கள்.
இதற்கிடையே டெல்லி போலீசாரால் கைப்பற்றப்பட்ட ரூ.1,513 கோடி மதிப்புள்ள 2,800 கிலோ போதைப்பொருட்கள் நேற்று அதிரடியாக அழிக்கப்பட்டன. டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனா, போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோரா முன்னிலையில் டெல்லியின் நிலோதி பகுதியில் இந்த போதைப்பொருட்கள் அழிக்கப்பட்டன.
இதில் 2,372 கிலோ கஞ்சா, 4 கிலோ கேட்டமின், 204 கிராம் கோகைன் உள்ளிட்ட போதைப்பொருட்கள் அழிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.