< Back
தேசிய செய்திகள்
ரூ. 10 லட்சம் சன்மானம் அறிவித்து தீவிரமாக தேடப்பட்ட நக்சலைட் அதிரடி கைது
தேசிய செய்திகள்

ரூ. 10 லட்சம் சன்மானம் அறிவித்து தீவிரமாக தேடப்பட்ட நக்சலைட் அதிரடி கைது

தினத்தந்தி
|
18 Dec 2022 1:09 PM IST

பீகாரில் 10 லட்சம் ரூபாய் வரை சன்மானம் அறிவித்து தேடப்பட்ட நக்சலைட் கைது செய்யப்பட்டார்.

பாட்னா,

பீகார் மாநிலத்தில் 60க்கும் மேற்பட்ட குற்றவழக்குகளில் தொடர்புடைய நக்சலைட்டான அபிஜீத் யாதவை போலீசார் தேடி வந்தனர். அபிஜீத் யாதவ் குறித்து தகவல் அளித்தால் 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என ஜார்கண்ட் மாநிலமும், 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என பீகார் அரசும் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் பீகாரின் காயா மாவட்டத்தில் இருக்கும் வனப்பகுதியில் அபிஜீத் யாதவ் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து ஏகே56 ரக துப்பாகிகள், 97 தோட்டாக்கள், வெடிப்பொருட்கள், செல்போன் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்