< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ஜவுளி வியாபாரியிடம் ரூ.1½ லட்சம் `அபேஸ்'
|12 Aug 2022 9:15 PM IST
உப்பள்ளி அருகே, பஸ்சில் பயணித்தபோது ஜவுளி வியாபாரியிடம் ரூ.1½ லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.
உப்பள்ளி;
தார்வார் மாவட்டம் உப்பள்ளி குபஸ்தஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் தேவாரம் பவாசி (வயது 29). இவர் அந்த பகுதியில் ஜவுளி துணிகள் மொத்த விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் அவர், உத்தர கன்னடா மாவட்டம் முண்டுகோடு, அனவட்டி மற்றும் அனஹள்ளி பகுதிகளில் வசூல் செய்த ரூ.1½ லட்சம் பணத்துடன் உப்பள்ளிக்கு பஸ்சில் வந்து கொண்டிருந்தார்.
அவர் சிறிது நேரம் பஸ்சில் அயர்ந்து உரங்கி உள்ளார். பின்னர், கண்விழித்து பார்த்தபோது பணப்பை மாயமாகி இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக இதுகுறித்து உப்பள்ளி புறநகர் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதுதொடர்பாக பஸ்சின் டிரைவர், கண்டக்டரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.