< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மதுபானக்கொள்கை முறைகேடு - கவிதாவுக்கு ஜாமீன் மறுப்பு
|8 April 2024 11:06 AM IST
இடைக்கால ஜாமீன் கோரி கவிதா தாக்கல் செய்த மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
புதுடெல்லி,
தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகர ராவின் மகளும், தெலுங்கானா மேலவை உறுப்பினருமான கவிதாவின் வீட்டில் அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் சேர்ந்து சோதனை நடத்தினர். அதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து கவிதாவை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க டெல்லி நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்ற நீதிபதி காவேரி பவேஜா, இடைக்கால ஜாமீன் கோரி கவிதா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தார்.