< Back
தேசிய செய்திகள்
அமேதி தொகுதியில் போட்டியிட பிரியங்கா காந்தி கணவர் ராபர்ட் வதேரா  விருப்பம்
தேசிய செய்திகள்

அமேதி தொகுதியில் போட்டியிட பிரியங்கா காந்தி கணவர் ராபர்ட் வதேரா விருப்பம்

தினத்தந்தி
|
4 April 2024 9:32 PM IST

பிரியங்கா உடன் 1999-ல் அமேதியில் பிரச்சாரம் மேற்கொண்டது நன்றாக நினைவில் இருக்கிறது என்று ராபர்ட் வதேரா தெரிவித்துள்ளார்.

அமேதி,

உத்தர பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் போட்டியிட பிரியங்கா கணவரான ராபர்ட் வதேரா, விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராபர்ட் வதேரா கூறியதாவது: " அமேதி தொகுதியில் எம்.பியாக இருக்கும் ஸ்மிரிதி இராணி மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

அமேதி மக்கள் தங்களின் தவறை புரிந்து கொண்டனர். நான் அரசியலில் இறங்கினால் அமேதியை தேர்வு செய்ய வேண்டும் என்று அமேதி மக்களிடம் இருந்து எனக்கு கோரிக்கை வந்தது. எனது முதல் அரசியல் பிரச்சாரம் கூட அமேதியில் இருந்தே தொடங்கியது. பிரியங்கா உடன் 1999-ல் அமேதியில் பிரச்சாரம் மேற்கொண்டது நன்றாக நினைவில் இருக்கிறது" என்றார்.

மேலும் செய்திகள்