< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
கேரளாவில் கடல் அரிப்பால் நீரில் மூழ்கிய சாலை - 47 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பு
|13 Jun 2023 7:49 PM IST
கொல்லம்கோட்டில் இருந்து நீரோடி வரையிலான ஒரு கிலோ மீட்டர் தூரம் தார்சாலை முழுவதும் நீரில் மூழ்கியது.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பொழியூரில் தென்மேற்கு பருவமழை காரணமாக கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கடற்கரை அருகே இருந்த 6 வீடுகள் இடிந்து சேதமடைந்தன. மேலும் 47 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
கொல்லம்கோட்டில் இருந்து நீரோடி வரையிலான ஒரு கிலோ மீட்டர் தூரம் தார்சாலை முழுவதும் நீரில் மூழ்கியது. தொடர்ந்து கடல் சீற்றம் காணப்படுவதால் கடற்கரைக்கு யாரும் செல்ல வேண்டாம் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.