< Back
தேசிய செய்திகள்
நிதின் கட்காரி    உ.பி.யில் அமெரிக்காவுக்கு இணையான சாலை உட்கட்டமைப்பு; மத்திய மந்திரி கட்காரி பேச்சு
தேசிய செய்திகள்

நிதின் கட்காரி உ.பி.யில் அமெரிக்காவுக்கு இணையான சாலை உட்கட்டமைப்பு; மத்திய மந்திரி கட்காரி பேச்சு

தினத்தந்தி
|
9 Oct 2022 10:36 AM IST

உத்தர பிரதேசத்தில் 2024-ம் ஆண்டுக்குள் அமெரிக்காவுக்கு இணையான சாலை உட்கட்டமைப்பு ஏற்படுத்தப்படும் என மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறியுள்ளார்.



லக்னோ,


உத்தர பிரதேசத்தின் லக்னோ நகரில் 81-வது வருடாந்திர இந்திய சாலைகள் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மந்திரி நிதின் கட்காரி கலந்து கொண்டார்.

அவர் பேசும்போது, நான் யோகிஜிக்கு (உத்தர பிரதேச முதல்-மந்திரி) வாக்குறுதி அளித்து இருக்கிறேன். 2024-ம் ஆண்டு முடிவதற்குள், உத்தர பிரதேசத்தில் அமெரிக்காவுக்கு இணையாக சாலை உட்கட்டமைப்பை நாங்கள் (மத்திய அரசு) ஏற்படுத்தி தருவோம்.

இதற்காக, உத்தர பிரதேசத்தில் ரூ.5 லட்சம் கோடி மதிப்பில் சாலை திட்ட பணிகள் நடைபெறும் என கூறியுள்ளார். இதனை முன்னிட்டு ரூ.8 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்ட பணிகளுக்கான அறிவிப்பு ஒன்றையும் அவர் வெளியிட்டார்.

அரசாங்கத்திடம் தரமுள்ள சாலைகளை அமைப்பதற்கு பண பற்றாக்குறை இல்லை என்றும் அவர் பேசியுள்ளார். இதன்பின்னர், லக்னோ நகரில் முதல்-மந்திரி இல்லத்தில் நடந்த மறுசீராய்வு கூட்டத்திலும் அவர் பங்கேற்றார். அந்த கூட்டத்தில் உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தும் கலந்து கொண்டார்.

மேலும் செய்திகள்