< Back
தேசிய செய்திகள்
பிரதமர் மோடி பேரணி பாதுகாப்புக்கு செல்லும் வழியில் சாலை விபத்து; 6 போலீசார் பலி
தேசிய செய்திகள்

பிரதமர் மோடி பேரணி பாதுகாப்புக்கு செல்லும் வழியில் சாலை விபத்து; 6 போலீசார் பலி

தினத்தந்தி
|
19 Nov 2023 6:57 PM IST

அவர்களின் உடல்களுக்கு, பிரேத பரிசோதனைக்கு பின்னர் அரசு மரியாதையுடன் இறுதி சடங்குகள் நடந்தன.

நகார்,

ராஜஸ்தானின் நகார் மாவட்டத்தில் பிரதமர் மோடியின் பேரணிக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக நகார் மாவட்டத்தின் போலீசார் புறப்பட்டு சென்றனர்.

இதில், ஜுன்ஜுனு பகுதியை நோக்கி சென்றபோது, அவர்களுடைய வாகனம் விபத்தில் சிக்கியது. லாரி ஒன்றுடன் அவர்களுடைய வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்தனர்.

உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் பலியானார். பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவர்களின் உடல்களுக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்குகள் நடந்தன. இந்த சம்பவத்திற்கு ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் வருத்தம் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்