< Back
தேசிய செய்திகள்
பஸ் நிலையத்தில் நின்ற பயணிகள் மீது மினி லாரி மோதியது- 3 பேர் பலி
தேசிய செய்திகள்

பஸ் நிலையத்தில் நின்ற பயணிகள் மீது மினி லாரி மோதியது- 3 பேர் பலி

தினத்தந்தி
|
9 Dec 2023 5:40 PM IST

விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம், சஹரன்பூரின் நாகல் பகுதியில் பஸ் நிலையம் உள்ளது. இன்று பஸ் நிலையத்திற்கு அருகே நின்று கொண்டிருந்த மக்கள் மீது கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி திடீரென மோதியது. இதில் இரண்டு மாணவர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.

சம்பவம் பற்றி அறிந்து விரைந்து வந்த போலீசார் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர்களில் இரண்டு பேர் லக்கி (வயது 17), நோமன் (வயது 20) என அடையாளம் தெரியவந்துள்ளது. ஒருவர் அடையாளம் தெரியவில்லை என்று காவல் அதிகாரி சாகர் ஜெயின் தெரிவித்தார்.

இச்சம்பவத்தால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பகுதியில் அடிக்கடி விபத்து நடப்பதால், அங்கு சுரங்கப் பாதை அல்லது மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கமிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்