< Back
தேசிய செய்திகள்
பிரதமர் மோடி வருகையையொட்டி பெங்களூருவில் சாலைகள் சீரமைப்பு பணி தீவிரம்
தேசிய செய்திகள்

பிரதமர் மோடி வருகையையொட்டி பெங்களூருவில் சாலைகள் சீரமைப்பு பணி தீவிரம்

தினத்தந்தி
|
8 Nov 2022 2:53 AM IST

பிரதமர் மோடி வருகையையொட்டி பெங்களூருவில் சாலை சீரமைப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பெங்களூரு:

பிரதமர் மோடி வருகையையொட்டி பெங்களூருவில் சாலை சீரமைப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சாலை பள்ளங்களால் விபத்து

பிரதமர் நரேந்திர மோடி வருகிற 11-ந் தேதி பெங்களூருவுக்கு வருகை தர உள்ளார். இதன் காரணமாக பெங்களூருவில் உள்ள சாலை பள்ளங்களை மூடுவது, சீரமைப்பது, சாலைகளை புதிதாக போடும் பணிகளை மாநகராட்சி முடுக்கி விட்டுள்ளது.

குறிப்பாக வந்தே பாரத் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் திட்டத்தை தொடங்கி வைக்க சிட்டி ரெயில் நிலையத்திற்கு பிரதமர் வருகை தர உள்ளதால், ரெயில் நிலையத்தை சுற்றியுள்ள சாலைகள் புதிதாக போடப்பட்டுள்ளது.

மாநகராட்சிக்குவாகன ஓட்டிகள் கேள்வி

மாதக்கணக்கில் அந்த சாலை பள்ளங்களை மூடும்படி மாநகராட்சிக்கு வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வந்தாலும், அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படாமலேயே இருந்தது. தற்போது பிரதமர் வருகை காரணமாக சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதுபோல், சுற்றுப்பயணத்தின் போது பிரதமர் செல்லும் சாலைகள் புதிதாக போடப்பட்டு வருகிறது. கான்கிரீட் சாலை மீது கூட தார் ஊற்றி புதிதாக போடும் பணி நடந்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரதமர் பெங்களூருவுக்கு வந்திருந்த போது பல கோடி ரூபாய்க்கு இரவோடு, இரவாக ஞானபாரதி அருகே போடப்பட்ட சாலையில் பள்ளம் விழுந்திருந்தது. இதுபற்றி பிரதமர் அலுவலகத்திற்கு சமூக ஆர்வலர்கள் புகார் அளித்ததால், கர்நாடக அரசு விசாரணைக்கு உத்தரவிட்டு இருந்தது. அதே நேரத்தில் பிரதமர் பெங்களூருவுக்கு வந்தால் தான் சாலை போடும் பணி நடைபெற வேண்டுமா? என்று வாகன ஓட்டிகள் மாநகராட்சிக்கு கேள்வி எழுப்பி உள்ளனர்.

மேலும் செய்திகள்