< Back
தேசிய செய்திகள்
2002-ம் ஆண்டில் வன்முறையாளர்களுக்கு பாடம் கற்பிக்கப்பட்டது; பாஜக அமைதியை கொண்டு வந்தது - அமித்ஷா
தேசிய செய்திகள்

2002-ம் ஆண்டில் வன்முறையாளர்களுக்கு பாடம் கற்பிக்கப்பட்டது; பாஜக அமைதியை கொண்டு வந்தது - அமித்ஷா

தினத்தந்தி
|
26 Nov 2022 12:45 AM IST

2002ம் ஆண்டில் வன்முறையாளர்களுக்கு பாடம் கற்பிக்கப்பட்டது; பாஜக அமைதியை கொண்டுவந்தது என்று அமித்ஷா தெரிவித்தார்.

காந்திநகர்,

182 தொகுதிகளை கொண்ட குஜராத் மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம் 1 மற்றும் 5-ம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.

தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகளை தேர்தல் பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றன.

அந்த வகையில் குஜராத் மாநிலம் ஹுடா மாவட்டம் மஹூடா நகரில் பாஜக மூத்த தலைவரும் உள்துறை மந்திரியுமான அமித்ஷா பிரசார கூட்டத்தில் பங்கேற்றார்.

அப்போது அமித் ஷா பேசியதாவது, பாரூச் நகரில் நிறைய கலவரம், வன்முறை, ஊரடங்கு அமலாகியுள்ளது. குழப்பத்தால் குஜராத்தில் வளர்ச்சியில்லாமல் இருந்தது. 2022-ம் ஆண்டு மத கலவரத்தை தூண்ட முயற்சித்தனர். நாங்கள் அவர்களுக்கு பாடம் கற்பித்தோம், அவர்களை சிறையில் அடைத்தோம். 22 ஆண்டுகள் ஆகிவிட்டது, இதில் நாம் ஒருமுறை கூட ஊரடங்கு அமல்படுத்தியதில்லை. நிறைய மத கலவரங்களை பார்த்த மண்ணில் பாஜக அமைதியை கொண்டுவந்துள்ளது' என்றார்.

மேலும் செய்திகள்