< Back
தேசிய செய்திகள்
கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கு:  சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்
தேசிய செய்திகள்

கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கு: சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

தினத்தந்தி
|
8 Oct 2024 5:42 AM IST

பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட விவகாரத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.

புதுடெல்லி,

மேற்கு வங்கத்தில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட விவகாரத்தில் கொல்கத்தாவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. தன்னார்வலராக காவல் துறையினருக்கு உதவிகள் செய்துவந்த தற்காலிக பணியாளர் சஞ்சய் ராய்தான் பெண் மருத்துவரை வன்கொடுமை செய்து கொன்றுள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில், இந்த வழக்கை சிபிஐ விசாரித்தது. இந்த நிலையில், கொல்கத்தாவின் சீல்டா பகுதியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் நேற்று 45 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். இதில், 200 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. தன்னார்வலராக காவல் துறையினருக்கு உதவிகள் செய்துவந்த தற்காலிக பணியாளர் சஞ்சய் ராய், இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

மேலும் செய்திகள்