< Back
தேசிய செய்திகள்
புதுச்சேரியில் அரசுப் பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றியமைப்பு
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் அரசுப் பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றியமைப்பு

தினத்தந்தி
|
9 July 2024 4:50 PM IST

புதுச்சேரியில் அரசுப் பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி,

புதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளிகள், தற்போது காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 3:45 மணி வரை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சிபிஎஸ்இ பாடத்திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதால் அரசுப் பள்ளிகளிள் செயல்படும் நேரங்களை மாற்றி கல்வித்துறை இயக்குநர் பிரியதர்ஷினி, பள்ளி முதல்வர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

அதன்படி, காலை 9 மணிக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு மதியம் 12. 25 மணிக்கு உணவு இடைவேளை விடப்படுகிறது. அதன்பிறகு 1.35 மணிக்கு தொடங்கி மாலை 4:20 மணி வரை பள்ளிகள் செயல்பட உள்ளன. இடையில் இருமுறை 10 நிமிடங்கள் இடைவேளை விடப்படுகிறது.

இந்த புதிய நடைமுறை வருகிற 15-ம் தேதி காமராஜர் பிறந்தநாள் அன்று அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கேற்ப 8 பாடவேளைகளாக பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்