குடியரசு தின விழாவின் நிறைவாக முப்படைகளும் பாசறைக்கு திரும்பும் நிகழ்வு: பிரதமர் மோடி பங்கேற்பு
|ஒவ்வொரு ஆண்டும் பாசறை திரும்பும் நிகழ்ச்சி மிகப் பிரமாண்டமாக நடைபெறும்.
புதுடெல்லி,
நாட்டின் 75-வது குடியரசு தின விழா கொண்டாட்டம் கடந்த 26ஆம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றினார். சிறப்பு விருந்தினராக இமானுவேல் மேக்ரான் கலந்துகொண்டார்.
இந்த நிலையில், குடியரசு தின விழா கொண்டாட்டங்கள் சிறப்பாக முடிந்துள்ள நிலையில், முப்படைகளும் பாசறை திரும்பும் நிகழ்ச்சி டெல்லியில் உள்ள விஜய் சவுக்கில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த பாசறை திரும்பும் நிகழ்ச்சி மிகப் பிரமாண்டமாக நடைபெறும். முப்படைகளின் பேண்ட் வாத்திய இசை நிகழ்ச்சியே பாசறை திரும்பும் நிகழ்ச்சியாகும்.
குடியரசு தின விழாவுக்காக வீரர்கள் தங்கள் இடத்தில் இருந்து டெல்லி வந்துள்ள நிலையில், சிறப்பு நிகழ்ச்சிகளுக்குப் பின்னர் முப்படைகளும் மீண்டும் பாசறை திரும்புகின்றனர். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, ஜனாதிபதி திரவுபதி முர்மு உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.