< Back
தேசிய செய்திகள்
தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு -வீரப்பமொய்லி திடீர் அறிவிப்பு
தேசிய செய்திகள்

தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு -வீரப்பமொய்லி திடீர் அறிவிப்பு

தினத்தந்தி
|
8 April 2024 5:14 PM IST

வீரப்ப மொய்லி 1992-ம் ஆண்டு முதல் 1994-ம் ஆண்டு வரை கர்நாடக முதல்-மந்திரியாக பதவி வகித்தார்.

பெங்களூரு,

கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியும், முன்னாள் மத்திய மந்திரி யுமான வீரப்பமொய்லி இந்த நாடாளுமன்ற தேர்தலில் சிக்பள்ளாப்பூர் தொகுதியில் போட்டியிட காங்கிரசில் டிக்கெட் கேட்டார். ஆனால் அவருக்கு காங்கிரஸ் மேலிடம் டிக்கெட் தரவில்லை. அவருக்கு பதிலாக காங்கிரஸ் இளைஞரணி நிர்வாகி ரக்ஷா ராமையாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் வீரப்பமொய்லி அதிருப்தியில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் அவர் தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், "சிக்பள்ளாப்பூர் தொகுதியில் போட்டியிட நான் டிக்கெட் கேட்டேன். ஆனால் கட்சி மேலிடம் இந்த போட்டியில் இருந்து விலகி கொள்ளுமாறு என்னிடம் கூறியது. கட்சி மேலிடத்தின் முடிவை ஏற்று நான் போட்டியில் இருந்து விலகிக் கொண்டேன்.

நான் தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறேன். எங்கள் கட்சி வேட்பாளர் ரக்ஷா ராமையாவை ஆதரிக்கிறேன். அவரை ஆதரிக்குமாறு எனது ஆதரவாளர்களையும் கேட்டுக் கொண்டுள்ளேன்" என்றார். இவர் 1992-ம் ஆண்டு முதல் 94-ம் ஆண்டு வரை கர்நாடக முதல்-மந்திரியாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்