< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
கேரளா: மைனர் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த முன்னாள் ராணுவ வீரர் கைது
|5 Aug 2023 2:02 AM IST
இரண்டு மைனர் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக 56 வயது ஓய்வுபெற்ற ராணுவ வீரர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள பூவார் என்னும் பகுதியில் இரண்டு மைனர் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக 56 வயது ஓய்வுபெற்ற ராணுவ வீரர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
ஓய்வுபெற்ற ராணுவ வீரரான ஷாஜி என்பவர் தனது பக்கத்து வீட்டில் வாடகைக்கு வசிக்கும் முதல் 10 மற்றும் 12 வயது சிறுமிகளை கடந்த மே மாதம் முதல் துஷ்பிரயோகம் செய்து வந்துள்ளார்.
ஷாஜியால் பாதிக்கப்பட்ட சிறுமிகளில் ஒருவர், தங்கள் பள்ளியில் நடந்த ஆலோசனை கூட்டத்தின்போது தனக்கு ஏற்பட்ட கொடூர சம்பவத்தை கூறியதை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
இதனை தொடர்ந்து பள்ளி நிர்வாகத்தினர் பூவார் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, போலீசார் ஷாஜியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.