< Back
தேசிய செய்திகள்
சபரிமலைக்கு வரும் பக்தர்களிடம் உணவகங்களில் கூடுதல் விலை வசூலிக்கக்கூடாது: கேரள ஐகோர்ட்டு உத்தரவு
தேசிய செய்திகள்

சபரிமலைக்கு வரும் பக்தர்களிடம் உணவகங்களில் கூடுதல் விலை வசூலிக்கக்கூடாது: கேரள ஐகோர்ட்டு உத்தரவு

தினத்தந்தி
|
7 Jan 2024 2:56 AM IST

உணவகங்களில் சாப்பிட வரும் பக்தர்களிடம் கூடுதல் விலை வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளது.

திருவனந்தபுரம்,

மகர விளக்கு பூஜையையொட்டி தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வருகின்றனர். அவ்வாறு வரும் ஐயப்ப பக்தர்கள் அங்குள்ள உணவகங்களில் சாப்பிடும் போது, அவர்களிடம் கூடுதல் விலை வசூலிப்பதாக பல்வேறு தரப்பினரிடம் இருந்து புகார்கள் வந்தன. இதை கேரள ஐகோர்ட்டு நீதிபதிகள் அணில் கே.நரேந்திரன், கிரிஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு தாமாக முன்வந்து விசாரித்தது.

அப்போது, சபரிமலையில் மகர விளக்கு பூஜைக்கு வரும் பக்தர்களிடம் உணவகங்கள் கூடுதல் விலை வசூலிக்கக்கூடாது. இதுகுறித்து எருமேலி, ராணி, பெருநாடு கிராம ஊராட்சிகள் விசாரித்து, சம்பந்தப்பட்ட உணவகங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில அரசு சார்பில் பறக்கும் படை, உள்ளாட்சித்துறை, சுகாதாரத்துறை, திருவாங்கூர் தேவசம்போர்டு அதிகாரிகள் தொடர் சோதனை மேற்கொண்டு, பக்தர்களுக்கு நியாயமான விலையில் உணவு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்