< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
அக்னிபத் திட்டத்துக்கு எதிராக பஞ்சாப் சட்டசபையில் தீர்மானம்
|1 July 2022 4:26 AM IST
அக்னிபத் திட்டத்துக்கு எதிராக பஞ்சாப் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சண்டிகார்,
முப்படைகளில் 4 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை பணியில் சேர்க்கும் அக்னிபத் திட்டத்துக்கு பல்வேறு மாநில அரசுகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் பஞ்சாப் அரசு நேற்று இந்த திட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது. மாநில சட்டசபையில் முதல்-மந்திரி பகவந்த் மான் இந்த தீர்மானத்தை தாக்கல் செய்தார். அப்போது, இந்த திட்டம் நாட்டின் இளைஞர்களுக்கு எதிரானது எனக்கூறிய அவர், இது தொடர்பாக பிரதமர் மற்றும் உள்துறை மந்திரியை சந்தித்து பேச இருப்பதாகவும் தெரிவித்தார்.
ஆனால் 2 பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் தீர்மானத்தை எதிர்த்து பேசினர். அதன்பின்னர் இந்த தீர்மானம் சட்டசபையில் நிறைவேறியது.