< Back
தேசிய செய்திகள்
மும்பை சாஸ்திரி நகரில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: ஒருவர் பலி, 16 பேர் காயம்
தேசிய செய்திகள்

மும்பை சாஸ்திரி நகரில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: ஒருவர் பலி, 16 பேர் காயம்

தினத்தந்தி
|
9 Jun 2022 3:41 AM IST

மும்பை சாஸ்திரி நகரில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 16 பேர் காயமடைந்தனர்.

மும்பை,

மும்பையின் பாந்த்ரா மேற்கில் உள்ள சாஸ்திரி நகரில் நேற்று இரவு ஜி+2 கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 16 பேர் காயமடைந்தனர் என்று பிரஹன்மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பிரஹன்மும்பை மாநகராட்சி டுவிட்டரில் தெரிவித்ததாவது:-

முதலில் பதிவிட்ட பதிவில், "பாந்த்ரா மேற்கு, சாஸ்திரி நகரில் ஒரு ஜி+2 கட்டிடம் இடிந்து விழுந்தது. காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். 3-4 பேர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன" என்று பதிவிட்டிருந்தது.

தொடர்ந்து பதிவிட்ட பதிவில், "சாஸ்திரி நகரில் உள்ள ஜி+2 வீடு இடிந்து விழுந்ததில் துரதிஷ்டவசமாக ஒருவர் உயிரிழந்தார். எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் அவரது குடும்பத்தினருடன் உள்ளன. 16 பேர் சிறு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன." என்று தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்