< Back
தேசிய செய்திகள்
பெங்களூரு லால்பாக்கில் குடியரசு தினவிழா மலர் கண்காட்சி
தேசிய செய்திகள்

பெங்களூரு லால்பாக்கில் குடியரசு தினவிழா மலர் கண்காட்சி

தினத்தந்தி
|
20 Jan 2023 2:01 AM IST

பெங்களூரு லால்பாக்கில் குடியரசு தினவிழா மலர் கண்காட்சியை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி வைக்கிறார்.

பெங்களூரு:-

பெங்களூருவின் வளர்ச்சி

ஆண்டுதோறும் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தையொட்டி பெங்களூரு லால்பாக் பூங்காவில் மலர் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்வது வழக்கம். வருகிற 26-ந் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, பெங்களூரு லால்பாக்கில் மலர் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள கண்ணாடி மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள மலர் கண்காட்சி தொடக்க விழா இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு, மலர் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார். இதில் தோட்டக்கலைத்துறை மந்திரி முனிரத்னா உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். இந்த கண்காட்சியில் பெங்களூருவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிய கெம்பேகவுடா, திப்பு சுல்தான், நால்வடி கிருஷ்ணராஜ உடையார் ஆகியோரின் சேவைகளை மையப்படுத்தி மலர் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

போலீஸ் பாதுகாப்பு

மலர்களால் பிரமிடு உருவாக்கப்பட்டுள்ளது. உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளை சேர்ந்த மலர்களும் இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது. இந்த கண்காட்சி வருகிற 29-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியில் மலர்கள் குறித்த போட்டிகளும் நடக்கின்றன. இந்த கண்காட்சியை சுமார் 12 லட்சம் பேர் கண்டு ரசிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. லால்பாக்கில் ஆங்காங்கே ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்