< Back
தேசிய செய்திகள்
குடியரசு தின விழாவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த பிரதமர் மோடியின் தலைப்பாகை...!
தேசிய செய்திகள்

குடியரசு தின விழாவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த பிரதமர் மோடியின் தலைப்பாகை...!

தினத்தந்தி
|
26 Jan 2023 1:37 PM IST

குடியரசு தின விழாவில் பிரதமர் மோடி பல வண்ணங்களில் ஆன ராஜஸ்தானி தலைப்பாகையை அணிந்திருந்தது பார்வையாளர்களை கவர வைத்தது.

புதுடெல்லி,

பிரதமர் மோடி முக்கிய நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் போது விதவிதமான தலைப்பாகை அணிவை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்தாண்டு குடியரசு தின விழாவில், பல வண்ணங்களில் ஆன ராஜஸ்தானி தலைப்பாகையை அணிந்து பிரதமர் மோடி பங்கேற்றார். துண்டு ஒன்றையும் அணிந்திருந்தார். தேசிய போர் நினைவிடத்திற்கு சென்ற மோடி, அங்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதன் பிறகு குடியரசு தின கொண்டாட்டத்திலும் பங்கேற்றார்.

குடியரசு தின விழா நிறைவடைந்த பிறகு கார் கதவை திறந்து கொண்டு நின்றபடி பார்வையாளர்களை நோக்கி இரு கைகளையும் அசைவத்தவாறே சென்றார். கூட்டத்தில் இருந்த பார்வையாளர்கள் பாரத் மாதே கி ஜே.. பிரதமர் மோடி.. மோடி.. என கோஷமிட்டனர்.

கடந்த ஆண்டு, பிரதமர் மோடியின் உடையில் உத்தரகாண்ட் மற்றும் மணிப்பூரின் தனித்துவமான தலைப்பாகை இருந்தது. சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் ஆகிய இரு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடியின் உடைகள் மிகவும் தனித்துவமாக அமைந்து இருக்கின்றன. கடந்த 9 ஆண்டுகளாக அவர் இதுபோன்று தனித்துவமான உடைகளையே தேர்வு செய்து அணிந்து அசத்துகிறார்.

மேலும் செய்திகள்