< Back
தேசிய செய்திகள்
மூடிகெரேயில்  யானை தாக்கி பலியான விவசாயி குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்
தேசிய செய்திகள்

மூடிகெரேயில் யானை தாக்கி பலியான விவசாயி குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்

தினத்தந்தி
|
5 Sep 2023 6:30 PM GMT

மூடிகெரே தாலுகாவில் காட்டுயானை தாக்கி உயிரிழந்த விவசாயி குடும்பத்தினருக்கு வனத்துறை சார்பில் ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது.

சிக்கமகளூரு-

மூடிகெரே தாலுகாவில் காட்டுயானை தாக்கி உயிரிழந்த விவசாயி குடும்பத்தினருக்கு வனத்துறை சார்பில் ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது.

காட்டுயானை அட்டகாசம்

சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா ஆல்தூர் பகுதியில் கடந்த சில மாதங்களாக காட்டுயானைகள் அட்டகாசம் செய்து வருகிறது. விளைபயிர்களை மிதித்து நாசப்படுத்துவதுடன், பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன. இந்தநிலையில், ஆல்தூர் அருகே உள்ள அரேனூர் கிராமத்தை சேர்ந்தவர் துர்காகின்னி (வயது 51). விவசாயி.

இவர் கடந்த 2-ந் தேதி அப்பகுதியில் உள்ள தனது தோட்டத்திற்கு சென்றார். அங்கு துர்காகின்னி வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது, வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டுயானை தோட்டத்திற்குள் புகுந்து துர்காகின்னியை தும்பிக்கையால் தூக்கி வீசி, காலால் மிதித்து கொன்றது.

இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து துர்காகின்னியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிக்கமகளூரு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து அரேனூர் கிராம மக்கள் வனத்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.

ரூ.5 லட்சம் நிவாரணம்

அப்போது அவர்கள் கூறுகையில், கிராமத்திற்குள் நுழையும் காட்டு யானைகள் நடமாட்டத்தை தடுக்க வேண்டும். உயிரிழந்த துர்கா கின்னியின் குடும்பத்திற்கு அரசு சார்பில் நிவாரண தொகை வழங்க வேண்டும் என்றனர்.

இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக வனத்துறையினர் உறுதியளித்தனர். இந்தநிலையில் மாவட்ட வனத்துறை அதிகாரி கிராந்தி தலைமையில் வனத்துறையினர் துர்கா கின்னியின் வீட்டிற்கு சென்றனர்.

அங்கு துர்காகின்னியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். பின்னர் வனத்துறை சார்பில் ரூ.5 லட்சத்திற்கான காசோலையை துர்கா கின்னியின் மனைவியிடம் மாவட்ட வனத்துறை அதிகாரி கிராந்தி வழங்கினார்.

மேலும் செய்திகள்