திருமணமான நபருடன் தொடர்பு; கன்னட நடிகை ஒப்புதல்
|திருமணமான நபருடன் தொடர்பில் இருப்பதாக கன்னட நடிகை தெரிவித்துள்ளார்.
பெங்களூரு: கன்னட திரைஉலகில் நடிகையாக இருந்து வருபவர் ஜெயஸ்ரீ. இவர் தற்போது கன்னட தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இந்த நிலையில் இவர் தனக்கு திருமணமான நபர் ஒருவருடன் தொடர்பு இருப்பதாக பகீர் தகவலை வெளியிட்டு இருந்தார். அதைக்கேட்ட இவரது சக போட்டியாளர் ஆர்யவர்தன் குருஜி, உனக்கு 2 திருமணம் நடைபெறும் என்று ஜெயஸ்ரீக்கு ஆரூடம் தெரிவித்து இருக்கிறார்.
மேலும் அவர் உங்களுக்கு சரியாக இருக்கும் நபரை தேர்ந்தெடுத்தால் உங்களது வாழ்க்கையும், தொழிலும் நன்றாக இருக்கும் என்றும் தெரிவித்து இருக்கிறார். தற்போது இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. தனக்கு திருமணமான நபருடன் தொடர்பு இருப்பதாக நடிகை வெளிப்படையாக ஒப்புக்கொண்ட சம்பவம் கன்னட திரைஉலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.