அக்னிபத் திட்டத்தின் கீழ் பெண்களை ராணுவத்திற்கு சேர்க்கும் ஆள்சேர்ப்பு பணி; பெங்களூருவில் 3 நாட்கள் நடக்கிறது
|அக்னிபத் திட்டத்தின் கீழ் பெண்களை ராணுவத்திற்கு சேர்க்கும் ஆள்சேர்ப்பு பணி பெங்களூருவில் 3 நாட்கள் நடக்கிறது.
பெங்களூரு:
அக்னிபத் திட்டத்தின் மூலம் ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் பணி ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பெண்களை ராணுவத்தில் சேர்ப்பதற்காக பெங்களூருவில் 3 நாட்கள் ஆள்சேர்ப்பு பணி நடக்க உள்ளது. வருகிற நவம்பர் மாதம் 1-ந் தேதி முதல் 3-ந் தேதி வரை 3 நாட்கள் மானேக்ஷா மைதானத்தில் வைத்து ஆள்சேர்ப்பு பணி நடக்க உள்ளது. இந்த ஆள்சேர்ப்பு பணி கர்நாடகம், கேரளா, லட்சத்தீவு, மாகி பகுதிகளை சேர்ந்த பெண்களுக்காக நடக்கிறது. இந்த ஆள்சேர்ப்பு பணியில் கலந்து கொள்ள ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை நேற்று தொடங்கியது.
அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் உள்ளது. விண்ணப்பங்கள் சரிபார்த்த பின்னர் ஆள்சேர்ப்பு பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அக்டோபர் 12-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை ஆள்சேர்ப்பு பணியில் கலந்து கொள்வதற்கான அனுமதி சீட்டு வழங்கப்படுகிறது. ஆள்சேர்ப்பு பணியில் கலந்து கொள்ளwww.joinindianarmy.nic.inஎன்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.