< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ரூ.1 கோடி மதிப்பிலான பயணிகளின் திருடப்பட்ட பொருட்கள் மீட்பு; ரெயில்வே பாதுகாப்பு படை அதிரடி
|6 Aug 2022 10:29 PM IST
ரெயில்வே பாதுகாப்பு படை ஒரு மாதம் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் பயணிகளின் ரூ.1 கோடி மதிப்பிலான திருடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டு உள்ளன.
புதுடெல்லி,
ரெயில்வே பாதுகாப்பு படை யாத்ரி சுரக்சா என்ற பெயரில் கடந்த ஜூலையில் ஒரு மாதம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது. இந்த பணியில் சந்தேகத்திற்குரிய வகையிலான 365 பேரை படையினர் கைது செய்து உள்ளனர்.
அவர்கள் பின்னர் அரசு ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து 322 குற்ற வழக்குகள் பதிவாகின. அவற்றில் ரெயில் பயணிகளின் உடமைகள் திருட்டு போனது, மயக்க மருந்து கொடுத்து கொள்ளையடித்தல், செயின் பறிப்பு உள்ளிட்ட பல திடுக்கிடும் சம்பவங்கள் கண்டறியப்பட்டன.
இதனை தொடர்ந்து அவர்களிடம் இருந்து, ரெயில் பயணிகளின் ரூ.1 கோடி மதிப்பிலான திருடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டு உள்ளன. ரெயிலில் பயணம் செய்பவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதற்கான இதுபோன்ற முயற்சிகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.