தேசிய பங்குச்சந்தை முன்னாள் நிர்வாக இயக்குனர் சித்ரா ராமகிருஷ்ணாவின் வாக்குமூலம் பதிவு
|தேசிய பங்குச்சந்தை முன்னாள் நிர்வாக இயக்குனர் சித்ரா ராமகிருஷ்ணாவிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
தேசிய பங்குச்சந்தையின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக இருந்தவர், சித்ரா ராமகிருஷ்ணா. இவர், தேசிய பங்குச்சந்தை விவரங்களை ஏஜன்டுகளுக்கு முன்கூட்டியே கசியவிட்ட ஊழல், நிர்வாக முறைகேடுகள், பண மோசடி தொடர்பாக சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பண மோசடி வழக்கு தொடர்பாக மத்திய விசாரணை அமைப்பான அமலாக்க இயக்ககம் விசாரித்துவருகிறது. சித்ரா ராமகிருஷ்ணாவின் பதவிக்காலத்தில் தேசிய பங்குச்சந்தையில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து வருமானவரித்துறையும் மற்றொருபுறம் விசாரணை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில், திகார் சிறைக்குள் இரண்டு தடவைகளாக சித்ரா ராமகிருஷ்ணாவிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் குற்றவியல் பிரிவுகளின்கீழ் இந்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக அமலாக்க இயக்கக அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.