< Back
தேசிய செய்திகள்
செல்போன் பயன்படுத்தியதால் பெற்றோர் கண்டிப்பு; ஆற்றில் குதித்து மாணவர் தற்கொலை
தேசிய செய்திகள்

செல்போன் பயன்படுத்தியதால் பெற்றோர் கண்டிப்பு; ஆற்றில் குதித்து மாணவர் தற்கொலை

தினத்தந்தி
|
9 Sept 2022 9:13 PM IST

செல்போன் பயன்படுத்தியதால் பெற்றோர் கண்டித்ததால் ஆற்றில் குதித்து மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

சிவமொக்கா;


சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகாவை சோ்ந்தவர் சுரேஷ். இவரது மகன் யஷ்வந்த். இவர் அதே பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.யூ.சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் யஷ்வந்த் செல்போனில் விளையாடுவதை வழக்கமாக கொண்டு உள்ளார்.

இதனால் அவரது பெற்றோர் அவரை கண்டித்து வந்துள்ளனர். ஆனால் யஷ்வந்த் அதை கண்டு கொள்ளாமல் தினமும் செல்போனை பயன்படுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த யஷ்வந்த் செல்போனை பார்த்து கொண்டு இருந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அவரது பெற்றோர், அவரை திட்டி உள்ளனர். இதையடுத்து கோபமடைந்த யஷ்வந்த் உடனே வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். அவர் கிராமத்தின் புறநகர் பகுதியில் பாயும் பத்ரா ஆற்றுப்பகுதிக்கு சென்று, ஆற்றில் குதித்தார். இதில் அவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், பத்ராவதி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். மேலும், ஆற்றில் மூழ்கி உயிரிழந்த யஷ்வந்தின் உடலை மீட்டனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்