< Back
தேசிய செய்திகள்
வீரசாவர்க்கர் குறித்த புத்தகத்தை அனுப்ப தயார்; மந்திரி சுதாகர் பேட்டி
தேசிய செய்திகள்

வீரசாவர்க்கர் குறித்த புத்தகத்தை அனுப்ப தயார்; மந்திரி சுதாகர் பேட்டி

தினத்தந்தி
|
19 Aug 2022 11:03 PM IST

வீரசாவர்க்கர் குறித்த புத்தகங்களை அனுப்ப தயார் என்று மந்திரி சுதாகர் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் சிக்பள்ளாப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

சுதந்திரம் குறித்தும், வீரசாவர்க்கர் குறித்தும் அறிந்து கொள்ள விரும்புகிறவர்களுக்கு நாங்கள் அது தொடர்பான புத்தகத்தை அனுப்பி வைக்க தயாராக உள்ளோம். அந்த புத்தகத்தை படித்த பிறகு வீரசாவர்க்கர் குறித்து பேசட்டும். காங்கிரஸ் தலைவர்கள் அறைகுறையான தகவல்களுடன் பேசுவது சரியல்ல. தெளிவான தகவல்கள் இல்லாமல் சுதந்திர போராட்ட தியாகிகள் குறித்து பேசி அவர்களின் மதிப்பை குறைப்பது சரியல்ல. ஜனநாயகத்தில் கருத்துகளை தெரிவிக்க உரிமை உள்ளது. போராட்டமும் நடத்தலாம். ஆனால் சித்தராமையா மீது முட்டை வீசிய சம்பவம் ஏற்கத்தக்கது அல்ல. இந்த சம்பவத்தை நான் கண்டிக்கிறேன். முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா உள்ளிட்டோரும் கண்டித்துள்ளனர்.

இவ்வாறு சுதாகர் கூறினார்.

மேலும் செய்திகள்