< Back
தேசிய செய்திகள்
மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய தயார் - டெல்லி காவல்துறை தகவல்
தேசிய செய்திகள்

'மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய தயார்' - டெல்லி காவல்துறை தகவல்

தினத்தந்தி
|
26 April 2023 10:41 PM IST

கிரிமினல் வழக்கு பதிவு செய்வதற்கு முன்பாக ஆரம்பக்கட்ட விசாரணை நடத்த வேண்டியுள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் அளித்துள்ளனர். இந்த விவகாரத்தில் பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் டெல்லி காவல்துறை தரப்பில் ஆஜரான சாலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, பாலியல் தொந்தரவு புகாரில் பிரிஜ் பூஷன் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்வதற்கு முன்பாக ஆரம்பக்கட்ட விசாரணை நடத்த வேண்டியுள்ளதாக தெரிவித்தார்.

அதே சமயம் இந்த விவகாரத்தில் நேரடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு எண்ணம் கொண்டால், உடனடியாக வழக்குப்பதிவு செய்ய தயார் என்றும் அவர் தெரிவித்தார்.


மேலும் செய்திகள்