< Back
தேசிய செய்திகள்
சீன எல்லையில் எந்த ஒரு நிகழ்வையும் எதிர்கொள்ள தயார்:  சுகோய் போர் விமான பெண் விமானி பேட்டி
தேசிய செய்திகள்

சீன எல்லையில் எந்த ஒரு நிகழ்வையும் எதிர்கொள்ள தயார்: சுகோய் போர் விமான பெண் விமானி பேட்டி

தினத்தந்தி
|
27 Sep 2022 3:21 AM GMT

சீன எல்லையில் எந்த ஒரு நிகழ்வையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் என சுகோய் போர் விமானத்தின் ஆயுத தாக்குதல் பிரிவு பெண் விமானி பேட்டியில் கூறியுள்ளார்.



தேஜ்பூர்,


அசாமின் தேஜ்பூர் நகரில் கிழக்கு பிரிவில் சீன எல்லையை ஒட்டிய பகுதியில் இந்திய விமான படையின் படைத்தளத்தில் சுகோய் ரக சூ-30 போர் விமானத்தில் புதிய ஆயுதங்கள் மற்றும் மின்னணு போர் சாதனங்களை இணைக்கும் பணிகள் நடந்து வந்தன.

இதனையொட்டி, இந்திய விமான படையின் சுகோய் ரக போர் விமானத்தின் ஆயுத தாக்குதல் பிரிவில் பெண் விமானியாக பணியாற்றும் ஒரே அதிகாரியான லெப்டினன்ட் தேஜஸ்வி செய்தியாளர்களிடம் பேசினார்.

அவர் கூறும்போது, இந்திய விமான படையில் உள்ள ஒவ்வொரு போர் விமானியும், எப்போது வேண்டுமென்றாலும் நடைபெற கூடிய உண்மையான அதிரடி நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சிறந்த முறையில் பயிற்சி பெற்று வருகின்றனர். அதில் எங்களது தைரியம் வெளிப்படும்.

கிழக்கு பிரிவில், பல்வேறு விமான தளங்களில் இருந்து வந்துள்ள எங்களது விமானிகள், எந்தவொரு நிகழ்வையும் எதிர்கொள்ள தயாராகவே உள்ளனர். எங்களை நோக்கி வர கூடிய எந்தவொரு பணி மற்றும் சவால்களையும் சந்திக்க நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம் என கூறியுள்ளார்.

சுகோய் ரக போர் விமானத்தில், விமானியின் அறைக்கு பின்னால் இருந்தபடி, சென்சார்கள் மற்றும் ஆயுதங்களை கையாண்டபடியே, எதிரிகளின் இலக்குகளை தாக்கி அழிக்கும் பணியில் சிறப்பு அதிகாரிகள் ஈடுபட வேண்டும்.

சீனாவுடன் எல்லை பகுதியில் மோதல் போக்கு காணப்படும் சூழலில், அதனை எப்படி உணருகிறீர்கள்?என்பதற்கு பதிலளித்த தேஜஸ்வி, கடினம் நிறைந்த தருணங்களில் எங்களது மனம் வேறுபட்டு இருக்காது. அதுபோன்ற நேரங்களில் பணியாற்றுவதற்கு ஏற்ப தினசரி அடிப்படையில், பயிற்சிகளை திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறோம் என்று அவர் கூறியுள்ளார்.

இந்த பயிற்சி திட்டங்கள் நாங்கள் சிறப்புடன் செயலாற்ற உதவுவதுடன், எந்தவொரு எதிர்கால சூழலையும் எதிர்கொள்வதற்கு தயாராவதற்கும் மற்றும் பெரும் சிறப்புடன் விண்ணையெட்டு என்ற குறிக்கோளுடன் வாழவும் உதவுகிறது என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்