< Back
தேசிய செய்திகள்
மணிப்பூர் வன்முறை குறித்து விவாதிக்க தயார், எதிர்க்கட்சிகள் விவாதத்தை ஏன் தடுக்கின்றன...? அமித் ஷா கேள்வி
தேசிய செய்திகள்

மணிப்பூர் வன்முறை குறித்து விவாதிக்க தயார், எதிர்க்கட்சிகள் விவாதத்தை ஏன் தடுக்கின்றன...? அமித் ஷா கேள்வி

தினத்தந்தி
|
24 July 2023 3:45 PM IST

மணிப்பூர் வன்முறை குறித்து விவாதிக்க தயார், எதிர்க்கட்சிகள் விவாதத்தை ஏன் தடுக்கின்றன என நாடாளுமன்றத்தில் அமித் ஷா கேள்வி எழுப்பினார்.

புதுடெல்லி

மணிப்பூர் வன்முறை தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

அமளியை தொடர்ந்து மக்களவையில் உரையாற்றிய மத்திய மந்திரி அமித் ஷா மணிப்பூர் தொடர்பான விவாதத்திற்கு நான் தயாராக இருக்கிறேன். எதிர்க்கட்சிகள் ஏன் விரும்பவில்லை என்று தெரியவில்லை.

இந்த விவகாரத்தில் விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்த முக்கியமான விஷயத்தின் உண்மையை நாடு தெரிந்து கொள்வது முக்கியம்" என்று கூறினார்.

மணிப்பூர் வன்முறை தொடர்பாக நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமளியைக் கருத்தில் கொண்டு இன்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவைச் சந்தித்த பின்னர் அமித்ஷா இவ்வாறு கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்