< Back
தேசிய செய்திகள்
ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்த ரிசர்வ் வங்கி முடிவு?
தேசிய செய்திகள்

ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்த ரிசர்வ் வங்கி முடிவு?

தினத்தந்தி
|
25 Sept 2022 5:36 PM IST

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த நான்காவது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

புதுடெல்லி,

நாட்டின் பணிவீக்க விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ரிசர்வ் வங்கியின் கணிப்பை விட அதிகரித்துக்கொண்டே செல்வதால், பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் கடந்த மே மாதம் 4-ந்தேதி கூடிய ரிசர்வ் வங்கியின் 6பேர் கொண்ட நிதி கொள்கைக்குழு, ரெப்போ வட்டி விகிதத்தை 0, 40 புள்ளிகள்உயர்த்தியது. இதனால் வட்டி விகிதம் 4.40 சதவிகிதமாக அதிகரித்தது. தொடர்ந்து ஜூன் 8- ஆம் தேதி ரெப்போ வட்டி விகிதத்தை 0.50 சதவீதம் அதிகரித்ததால், 4.9 சதவீதமாக உயர்ந்தது.

மே மாதத்தில் ரெப்போ விகிதத்தை 40 பிபிஎஸ் மற்றும் ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தலா 50 பிபிஎஸ் உயர்த்தியது. தற்போதைய விகிதம் 5.4 சதவீதமாக உள்ளது.

இந்தநிலையில், குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை மேலும் 0.5% உயர்த்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் சில்லறை பணவீக்கம் ஆகஸ்டில் 7% ஆக அதிகரித்ததால் அதை கட்டுக்குள் கொண்டு வர ரிசர்வ் வங்கி முயற்சி செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்