< Back
தேசிய செய்திகள்
வங்கிக்கடன் வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை - ரிசர்வ் வங்கி அறிவிப்பு

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

வங்கிக்கடன் வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை - ரிசர்வ் வங்கி அறிவிப்பு

தினத்தந்தி
|
7 April 2023 3:43 AM IST

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

மும்பை,

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை (ரெப்போ ரேட்) ரிசர்வ் வங்கி அவ்வப்போது மாற்றி அமைத்து வருகிறது.

கடந்த ஆண்டு ேம மாதத்தில் இருந்து இந்த வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்த தொடங்கியது. 6 தவணைகளாக மொத்தம் 2.5 சதவீதம் உயர்த்தி உள்ளது. இதனால், தற்போது ரெப்போ ரேட் விகிதம் 6.5 சதவீதமாக உள்ளது.

இதற்கேற்ப வாடிக்கையாளர்களுக்கு அளித்த வீடு, வாகனம் மற்றும் தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதத்தை வங்கிகள் உயர்த்தின. கடனுக்கான தவணைத்தொகை உயர்ந்தது.

மாற்றம் இல்லை

பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ரெப்போ ரேட் விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தி வருகிறது. வட்டியை மேலும் ஒரு தடவை 0.25 சதவீதம் ரிசர்வ் வங்கி உயர்த்தும் என்றும், அதன்பிறகு வட்டியை உயர்த்துவதை நிறுத்தி வைக்கும் என்றும் பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குழு கூட்டம் மும்பையில் நடந்தது. அதில், ரெப்போ ரேட் விகிதத்தில் மாற்றம் செய்வது இல்லை என்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. இதனால், வீடு, வாகனம் மற்றும் தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதம் உயராது.

ரிசர்வ் வங்கி கவர்னர் பேட்டி

இதுகுறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

வங்கிகளுக்கு அளிக்கப்படும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை (ரெப்போ ரேட்) மாற்றுவது இல்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வட்டி, 6.5 சதவீதமாக நீடிக்கும்.

இது தற்காலிக நிறுத்தம்தான். நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். தேவைப்பட்டால், எதிர்கால கூட்டங்களில் வட்டியை உயர்த்த தயங்க மாட்டோம்.

சமீபகாலமாக சர்வதேச பொருளாதார நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதே சமயத்தில், நிதி ஸ்திரத்தன்மை தொடர்பான கவலைகள் நீடிக்கின்றன. எனவே, இப்போதைக்கு ரெப்போ ரேட் விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை.

பொருளாதார வளர்ச்சி

நடப்பு நிதிஆண்டில் (2023-2024) 6.4 சதவீத பொருளாதார வளர்ச்சி இருக்கும் என்று ஏற்கனவே கணித்து இருந்தோம். இப்போது, பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும் என்று கணித்துள்ளோம்.

நடப்பு நிதிஆண்டில் பணவீக்க விகிதம் 5.2 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். எங்கள் வேலை இன்னும் முடியவில்லை. பணவீக்கத்துக்கு எதிரான போரை தொடர வேண்டி உள்ளது. திட்டமிட்ட இலக்குக்குள் பணவீக்கம் வரும்வரை போர் தொடரும் என்று RBI keeps repo rate unchanged at 6.5%

Read more at:

http://timesofindia.indiatimes.com/articleshow/99284097.cms?utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppstஅவர் கூறினார்.

மேலும் செய்திகள்