< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ரேஷன் ஊழல் வழக்கு: வங்காள நடிகைக்கு அமலாக்கத்துறை சம்மன்
|30 May 2024 2:44 PM IST
ரேஷன் விநியோக முறைகேடு வழக்கு தொடர்பாக வங்காள நடிகைக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
கொல்கத்தா,
மேற்கு வங்காள மாநிலத்தில் ரேஷன் விநியோகத்தில் முறைகேடு நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு வரும் ஜூன் 5-ந்தேதி நேரில் ஆஜராகுமாறு வங்காள நடிகை ரிதுபர்ணா சென்குப்தாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
ஏற்கனவே கடந்த 2019-ம் ஆண்டு ரோஸ் வேலி நிதி நிறுவன ஊழல் தொடர்பாக நடிகை ரிதுபர்ணாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் தற்போது ரேஷன் ஊழல் வழக்கில் ரிதுபர்ணாவிற்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதனிடையே தனிப்பட்ட காரணங்களுக்காக நடிகை ரிதுபர்ணா சென்குப்தா தற்போது அமெரிக்கா சென்றிருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.