கல்லூரி கேண்டீன் சாப்பாட்டில் செத்து கிடந்த எலி
|மைசூரு அருகே கல்லூரி கேண்டீன் சாப்பாட்டில் எலி செத்து கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மைசூரு:
மைசூருவில் உள்ள மானச கங்கோத்ரி பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ஏராளமான மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று கல்லூரி தங்கும் விடுதியில் இருந்த கேன்டீனில் மாணவர்கள் சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது ஒரு மாணவனின் சாப்பாட்டில் எலி கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் கதறி கூச்சலிட்டார். அனைவரும் இந்த சாப்பாடை சாப்பிட்டதால், அவர்களால் அந்த உணவை ஜீரணிக்க முடியாமல் திணறினர். இதனால் கல்லூரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் மாணவர்கள் அனைவரும் தரமான உணவு வழங்ககோரி, கல்லூரி வளாகத்தில் போராட்டம் நடத்தினர். இது குறித்து கல்லூரி பதிவாளருக்கு தகவல் கிடைத்தது. அவர் வந்து பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது மாணவர்கள் கல்லூரியில் சுத்தமான குடிநீர் இல்லை. கழிவறை வசதி இல்லை. உணவில் கரப்பான் பூச்சி, எலிகள் செத்து மிதக்கிறது. தரமான உணவு இல்லை. இதை சாப்பிட்டு பலருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. எனவே தரமான உணவு வழங்கவேண்டும். தரமான உணவு வழக்கும்வரை எங்கள் போராட்டம் தொடங்கும் என்றனர். இந்த கேட்ட கல்லூரி பதிவாளர், விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டுவிட்டு கலைந்து சென்றனர்.