< Back
தேசிய செய்திகள்
மைனர் பெண் பாலியல் பலாத்காரம்; வாலிபர் கைது
தேசிய செய்திகள்

மைனர் பெண் பாலியல் பலாத்காரம்; வாலிபர் கைது

தினத்தந்தி
|
28 July 2022 8:04 PM IST

உடுப்பி அருகே மைனர்பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த சிறுவனையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

மங்களூரு;

நட்பாக பழக்கம்

உடுப்பி மாவட்டம் படுபித்ரி தாலுகா எஜமாடி பகுதியை சேர்ந்தவர் யாசின் (வயது 19). இவருக்கும் அதேப்பகுதியை சேர்ந்த மைனர்பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நட்பாக பழகி வந்தனர். யாசின் அந்தப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் யாசின் வீட்டில் யாரும் இல்லாததால், அவர் மைனர்பெண்ணை அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். அவருடன் நண்பரான சிறுவன் ஒருவனையும் யாசின் அழைத்து வந்துள்ளார்.

பாலியல் பலாத்காரம்

இந்த நிலையில் தனது வீட்டில் வைத்து யாசின், மைனர்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. மேலும் அவரை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் தெரிகிறது. இதுபற்றி வெளியே யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மைனர் பெண்ணை யாசின் மிரட்டி உள்ளார்.

இந்த நிலையில் நடந்த சம்பவம் குறித்து மைனர் பெண் தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சிறுமியின் தந்தை, படுபித்ரி போலீசில் புகார் அளித்தார்.

கைது

அதன்பேரில் படுபித்ரி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து யாசினை கைது செய்தனர். மேலும் யாசினுக்கு உடந்தையாக இருந்த சிறுவனையும் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து விசாரணைக்கு பிறகு யாசின், சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் சிறுவனை போலீசார், சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்