< Back
தேசிய செய்திகள்
மைனர் பெண் பாலியல் பலாத்காரம்; சிறுவனுக்கு போலீஸ் வலைவீச்சு
தேசிய செய்திகள்

மைனர் பெண் பாலியல் பலாத்காரம்; சிறுவனுக்கு போலீஸ் வலைவீச்சு

தினத்தந்தி
|
4 Sept 2022 8:11 PM IST

இன்ஸ்டாகிராம் மூலம் பழகி மைனர்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சிறுவனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மங்களூரு;

இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்


தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா தர்மஸ்தலா பகுதியை சேர்ந்த 16 வயது மைனர்பெண் தனது பெற்றோருடன் வசித்து வருகிறாள். இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறாள். இவளுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் 17 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதனால் இருவரும் செல்ேபான் எண்களை பரிமாறி பேசி வந்தனர்.

இந்த நிலையில் அந்த சிறுவன் கடந்த மாதம் (ஆகஸ்டு) 13-ந்தேதி மைனர் பெண்ணை தொடர்பு கொண்டு உனது வீட்டிற்கு வருவதாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மைனர் பெண், வீட்டுக்கு வர வேண்டாம் என்று தெரிவித்துள்ளாள்.

பாலியல் பலாத்காரம்

ஆனாலும் அந்த சிறுவன், வீட்டுக்கு வர அனுமதிக்காவிட்டால் உனது ெபற்றோரிடம் தகராறு செய்வேன் என்று மிரட்டி உள்ளான். இதனால் பயந்த மைனர்பெண் அந்த சிறுவனை வீட்டுக்கு வர சம்மதம் தெரிவித்துள்ளாள். இதையடுத்து இரவில் அனைவரும் தூங்கிய பிறகு மைனர்பெண்ணின் வீட்டுக்கு சிறுவன் சென்றுள்ளார். அங்கு வைத்து மைனர்பெண்ணை அவர் வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.

இதுகுறித்து வெளிேய யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மைனர்பெண்ணை மிரட்டி உள்ளாள். இதனால் பயந்த மைனர்பெண் இதுபற்றி யாரிடமும் கூறவில்லை. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு அந்த சிறுவன், கடந்த 2-ந்தேதியும் மைனர் பெண்ணின் வீட்டுக்கு சென்று பலாத்காரம் செய்துள்ளான்.

போலீஸ் வலைவீச்சு

இந்த நிலையில் மைனர்பெண்ணுக்கு திடீரென உடல் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை, பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், மைனர் பெண் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து மைனர்பெண்ணின் பெற்றோரிடம் டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இதுபற்றி மைனர் பெண்ணிடம் விசாரித்தனர். அப்போது அவர் நடந்த சம்பவங்களை கூறி கதறி அழுதார்.

இதுகுறித்து மைனர்பெண்ணின் பெற்றோர் தர்மஸ்தலா போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்