< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு 20 ஆண்டு கடுங்காவல்: சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு
|24 March 2024 1:50 AM IST
சிறுமியை பலாத்காரம் செய்தவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
மும்பையை சேர்ந்த 4 வயது சிறுமி கடந்த 2018-ம் ஆண்டு தனது வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தார். அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த 52 வயது ஆசாமி சமோசா தருவதாக சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி தனது வீட்டிற்கு அழைத்து சென்று, மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தாள்.
இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் தனது மகளை பலாத்காரம் செய்தவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கில் விசாரணையின்போது அவர் மீதான குற்றம் நிரூபணமானது. இதனை தொடர்ந்து அவருக்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.