மது ஊற்றி கொடுத்து கொடூரம்; மைனர் பெண் கூட்டு பலாத்காரம்
|மது ஊற்றி கொடுத்து மைனர் பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் சிவமொக்காவில் நடந்துள்ளது.
சிவமொக்கா:
சிவமொக்கா மாவட்டம் சாகர் டவுனில் ஜே.பி.நகரை பகுதியை சேர்ந்தவர் ஷபாத் (வயது 26). இவரது நண்பர் அஜய் (32). இவர்கள் இருவரும் அதே பகுதியை சேர்ந்த ஒரு மைனர் பெண்ணை சாகர் தாலுகாவில் உள்ள ஜோக் நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் அவர்கள் மது அருந்தியுள்ளனர். மேலும் மைனர் பெண்ணுக்கும் கட்டாயப்படுத்தி மது கொடுத்துள்ளனர். பின்னர் மைனர் பெண்ணை 2 பேரும் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். அதையடுத்து மைனர் பெண்ணை வீட்டு முன்புவிட்டு விட்டு 2 பேரும் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
குடிபோதையில் தள்ளாடியபடி வீட்டுக்கு வந்த மைனர் பெண்ணை பார்த்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்து சம்பவம் பற்றி விசாரித்தனர். அப்போது தன்னை ஷபாத்தும், அஜயும் சேர்ந்து மது ஊற்றி கொடுத்து பலாத்காரம் செய்துவிட்டதாக தெரிவித்து கதறி அழுதார். இதையடுத்து அவரது பெற்றோர், சாகர் டவுன் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அத்துடன் தலைமறைவான ஷபாத், அஜய் ஆகியோரை வலைவீசி தேடி வருகிறார்கள்.