< Back
தேசிய செய்திகள்
பாலியல் குற்றவாளி குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு மீண்டும் பரோல்
தேசிய செய்திகள்

பாலியல் குற்றவாளி குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு மீண்டும் பரோல்

தினத்தந்தி
|
19 Jan 2024 8:52 PM IST

கடந்த 4 ஆண்டுகளில் அவருக்கு 9 முறை பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ குருசார் மோடியா கிராமத்தில் 1967-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி பிறந்த குர்மீத்தை அவரது ஏழு வயதில், தேரா சச்சா சவுதா மத அமைப்பின் தலைவர் ஷா சட்னம் சிங்-ஆல் தேர்வு செய்யப்பட்டார். பின்னர் 1990 -ம் ஆண்டு, அமைப்பின் தலைவராக குர்மீத் ராம் ரஹிம் சிங்கை ஷா சட்னம் அறிவித்தார்.

2014-ம் ஆண்டு மெசஞ்சர் ஆப் காட் என்ற படத்தில் நடித்த குர்மீத், அடுத்தடுத்து 3 படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். பல்லாயிரக்கணக்கான சீடர்களை கொண்ட குர்மீத் ராம் ரஹிம் சிங், பல சர்ச்சைகளுக்கும், வழக்குகளுக்கும் சொந்தக்காரராக இருக்கிறார்.

இந்தநிலையில், பாலியல் வன்கொடுமை - கொலைக் குற்றத்துக்காக கைதான குர்மீத் ராம் ரஹீம் சிங்குக்கு 50 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது.

அவருக்கு 2 மாதங்களுக்குள் இரண்டாவது முறையாக 50 நாட்கள் பரோல் வழங்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, நவம்பர் 21, 2023-ல் அவருக்கு 50 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது. தற்போது மீண்டும் பரோல் வழங்கப்பட்டுள்ளது. தாய்க்கு உடல்நிலை சரியில்லை, தனக்கு உடல்நிலை சரியில்லை எனப் பல்வேறு காரணங்களைக் கூறி பலமுறை பரோல் பெற்றிருக்கிறார்.

கடந்த 4 ஆண்டுகளில் அவருக்கு 9 முறை பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்ற முறை பரோலில் வெளியே வந்த குர்மீத் ராம் ரஹிம் சிங், கிரிக்கெட் விளையாடியது, பட்டாக்கத்தியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியது போன்ற புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்